குறள்-57

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்


குறள்

சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை

மு.வ உரை

மகளிரைக் காவல் வைத்துக் காக்கும் காப்பு முறை என்ன பயனை உண்டாக்கும்? அவர்கள் நிறை என்னும் பண்பால் தம்மைத் தான் காக்கும் கற்பே சிறிந்தது.

சாலமன் பாப்பையா உரை

இத்தனை குணங்களும் இருக்கும்படி பெண்ணைச் சிறை வைத்துக் காவல் காப்பதில் பயன் என்ன? பெண்கள் தங்களைத் தாங்களே மன அடக்கத்தால் காக்கும் காவலே முதன்மையானது.

கலைஞர் உரை

தம்மைத் தாமே காத்துக்கொண்டு சிறந்த பண்புடன் வாழும் மகளிரை அடிமைகளாக நடத்த எண்ணுவது அறியாமையாகும்.

Transliteration

Siraikaakkum Kaappevan Seyyum Makalir
Niraikaakkum Kaappe Thalai

Couplet

Of what avail is watch and ward?
Honour’s woman’s safest guard.

Explanation in English

What avails the guard of a prison? The chief guard of a woman is her chastity.

குறள்-56

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்


குறள்

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்

மு.வ உரை

கற்பு நெறியில் தன்னையும் காத்துக்கொண்டு, தன்கணவனையும் காப்பாற்றி, தகுதியமைந்த புகழையும் காத்து உறுதி தளராமல் வாழ்கின்றவளே பெண்.

சாலமன் பாப்பையா உரை

உடலாலும் உள்ளத்தாலும் தன்னைக் காத்து, தன் கணவனின் நலன்களில் கவனம் வைத்து, குடும்பத்திற்கு நலம் தரும் புகழைக் காத்து, அறத்தைக் கடைப்பிடிப்பதில் சோர்வடையாமல் இருப்பவளே மனைவி.

கலைஞர் உரை

கற்புநெறியில் தன்னையும் தன் கணவனையும் காத்துக் கொண்டு, தமக்குப் பெருமை சேர்க்கும் புகழையும் காப்பாற்றிக் கொள்வதில் உறுதி குலையாமல் இருப்பவள் பெண்.

Transliteration

Tharkaaththuth Tharkontaar Penith Thakaisaandra
Sorkaaththuch Chorvilaal Pen

Couplet

Who guards herself, for husband’s comfort cares, her household’s fame,
In perfect wise with sleepless soul preserves, -give her a woman’s name.

Explanation in English

She is a wife who unweariedly guards herself, takes care of her husband, and preserves an unsullied fame.

குறள்-55

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்


குறள்

தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை

மு.வ உரை

வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும்.

சாலமன் பாப்பையா உரை

பிற தெய்வங்களைத் தொழாமல் கணவனையே தெய்வமாகத் தொழுது வாழும் மனைவி, பெய் என்று சொன்னால் மழை பெய்யும்.

கலைஞர் உரை

கணவன் வாக்கினைக் கடவுள் வாக்கினை விட மேலானதாகக் கருதி அவனையே தொழுதிடும் மனைவி பெய் என ஆணையிட்டவுடன் அஞ்சி நடுங்கிப் பெய்கின்ற மழையைப் போலத் தன்னை அடிமையாக எண்ணிக் கொள்பவளாவாள்.

Transliteration

Theyvam Thozhaaal Kozhunan Thozhudhezhuvaal
Peyyenap Peyyum Mazhai

Couplet

No God adoring, low she bends before her lord;
Then rising, serves: the rain falls instant at her word.

Explanation in English

If she, who does not worship God, but who rising worships her husband, say, “let it rain,” it will rain.

குறள்-54

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்


குறள்

பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்

மு.வ உரை

இல்வாழ்க்கையில் கற்பு என்னும் உறுதிநிலை இருக்கப் பெற்றால், பெண்ணைவிட பெருமையுடையவை வேறு என்ன இருக்கின்றன?

சாலமன் பாப்பையா உரை

கற்பு எனப்படும் மன உறுதி மட்டும் பெண்ணிடம் இருக்குமானால் மனைவியைக் காட்டிலும் மேலானவை எவை?

கலைஞர் உரை

கற்பென்னும் திண்மை கொண்ட பெண்மையின் உறுதிப் பண்பைப் பெற்றுவிட்டால், அதைவிடப் பெருமைக்குரியது வேறு யாது?

Transliteration

Pennin Perundhakka Yaavula Karpennum
Thinmaiun Taakap Perin

Couplet

If woman might of chastity retain,
What choicer treasure doth the world contain.

Explanation in English

What is more excellent than a wife, if she possess the stability of chastity?

குறள்-53

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்


குறள்

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை

மு.வ உரை

மனைவி நற்பண்பு உடையவளானால் வாழ்க்கையில் இல்லாதது என்ன? அவள் நற்பண்பு இல்லாதவளானால் வாழ்க்கையில் இருப்பது என்ன?

சாலமன் பாப்பையா உரை

நல்ல குணமும் நல்ல செயல்களும் உடையவனாய் மனைவி அமைந்துவிட்டால் ஒருவனுக்கு இல்லாததுதான் என்ன? அமையாவிட்டால் அவனிடம் இருப்பதுதான் என்ன?

கலைஞர் உரை

நல்ல பண்புடைய மனைவி அமைந்த வாழ்க்கையில் எல்லாம் இருக்கும் அப்படியொரு மனைவி அமையாத வாழ்க்கையில் எதுவுமே இருக்காது.

Transliteration

Illadhen Illaval Maanpaanaal Ulladhen
Illaval Maanaak Katai?

Couplet

There is no lack within the house, where wife in worth excels,
There is no luck within the house, where wife dishonored dwells.

Explanation in English

If his wife be eminent (in virtue), what does (that man) not possess? If she be without excellence, what does (he) possess?

குறள்-52

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்


குறள்

மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்

மு.வ உரை

இல்வாழ்க்கைக்கு தக்க நற்பண்பு மனைவியிடம் இல்லையானால், ஒருவனுடைய வாழ்க்கை வேறு எவ்வளவு சிறப்புடையதானாலும் பயன் இல்லை.

சாலமன் பாப்பையா உரை

நல்ல குணமும் நல்ல செயல்களும் மனைவியிடம் இல்லாமற் போனால் அவ்வாழ்க்கை எத்தனை சிறப்புகளைப் பெற்றிருந்தாலும் பெறாததே.

கலைஞர் உரை

நற்பண்புள்ள மனைவி அமையாத இல்வாழ்க்கை எவ்வளவு சிறப்புடையதாக இருந்தாலும் அதற்குத் தனிச்சிறப்புக் கிடையாது.

Transliteration

Manaimaatchi Illaalkan Illaayin Vaazhkkai
Enaimaatchith Thaayinum Il

Couplet

If household excellence be wanting in the wife,
Howe’er with splendour lived, all worthless is the life.

Explanation in English

If the wife be devoid of domestic excellence, whatever (other) greatness be possessed, the conjugal state, is nothing.

குறள்-51

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்


குறள்

மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை

மு.வ உரை

இல்வாழ்க்கைக்கு ஏற்ற நற்பண்பு உடையவளாகித் தன்கணவனுடைய பொருள் வளத்துக்குத் தக்க வாழ்க்கை நடத்துகிறவளே வாழ்க்கைத்துணை ஆவாள்.

சாலமன் பாப்பையா உரை

பிறந்த, புகுந்த குடும்பங்களுக்கு ஏற்ற நல்ல குணம், நல்ல செயல்களை உடையவளாய்த், தன்னை மணந்தவனின் வருவாய்க்கு ஏற்ப வாழ்க்கையை அமைப்பவளே மனைவி.

கலைஞர் உரை

இல்லறத்திற்குரிய பண்புகளுடன், பொருள் வளத்துக்குத் தக்கவாறு குடும்பம் நடத்துபவள், கணவனின் வாழ்வுக்குப் பெருந்துணையாவாள்.

Transliteration

Manaikdhakka Maanputaiyal Aakiththar Kontaan
Valaththakkaal Vaazhkkaith Thunai

Couplet

As doth the house beseem, she shows her wifely dignity;
As doth her husband’s wealth befit, she spends: help – meet is she.

Explanation in English

She who has the excellence of home virtues, and can expend within the means of her husband, is a help in the domestic state.

கடவுள் வாழ்த்து

கடவுள் வாழ்த்து
கடவுள் வாழ்த்து

ஆதி காலத்தில் எந்த ஒரு செயலை தொடங்கினாலும் கடவுளை வணங்கி தொடங்குவதே தமிழர்களின் இயல்பு. திருவள்ளுவரும் அவ்வாறே கடவுள் வாழ்த்து அதிகாரத்திலிருந்து திருக்குறளை தொடங்குகிறார்.

இந்த கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் கடவுளே இந்த உலகிற்க்கு முதன்மையானவர் என்றும் அந்தக் கடவுளை பகுத்து அறிந்தவரிகளிடம் கற்றலே சிறந்த கல்வி என்றும் கடவுளின் திருவடிகளைப் பற்றுபவரே நீண்ட ஆயுளை பெறுவார் என்றும் பாரபட்சம் பார்க்காத கடவுளை படுபவர்களுக்கு என்றும் துன்பம் நெருங்காது என்றும் இறைவனை புரிந்துகொண்டால் புகழடையலாம் என்றும் ஐம்புலன்களை அடக்கி உண்மையை கையாள்பவர்களுக்கு உயர்ந்த வாழ்வு கிட்டும் என்றும் இறைவனடியை நாடினால் கவலையற்ற தெளிந்த மனதை பெற்று இந்த பிறவி என்னும் பெருங்கடலை நீந்தலாம் என்றும் கூறுகிறார்.

உலகம் போற்றும் தொன்மையான தமிழ் மொழியின் சிறப்புகள்

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றி மூத்தக் குடி தமிழ் குடி” என்று போற்றப்படும் அளவிற்க்கு தொன்மையான மொழி தமிழ் மொழி ஆகும்.

தமிழ் பல மொழிகளின் தாய் மொழி எனக் கருதப்படுகிறது.

பல ஆயிரம் ஆண்டுகளாக தொடர்ச்சியாக பேசப்படுகிற மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்றாகும்.

தமிழ் மொழியில் உள்ளதுபோல் வேறு எந்த மொழிகளிலும் அதிக இலக்கண நூல்கள் இல்லை. இது தமிழுக்கே உரிய சிறப்பாகும்.

எதுகை மோனை வாக்கிய அமைப்பு உலகில் தமிழ் மொழியில் மட்டுமே காணப்படுகிறது. இது தமிழுக்கே உரிய தனிச்சிறப்பாகும்

தமிழிற்க்கு 55,000 கல்வெட்டுகள் இந்தியாவில் கண்டுபிடிக்க பட்டுள்ளன. தாய்லாந்து,இலங்கை, எகிப்து போன்ற நாடுகளிலும் சில கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. உலகில் அதிகமான கல்வெட்டுகள் கொண்ட மொழி எது என்றால் அது தமிழ் மொழிதான்.

உலகில் தமிழர்கள் 205 நாடுகளில் வாழ்கிறார்கள்.

13 1/2 கோடிக்கு மேலாக தமிழர்கள் இருப்பதாகவும் ஒரு ஆய்வு.

குறள்-50

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: இல்வாழ்க்கை


குறள்

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்

மு.வ உரை

உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன், வானுலகத்தில் உள்ள தெய்வ முறையில் வைத்து மதிக்கப்படுவான்.

சாலமன் பாப்பையா உரை

மனைவியுடன் வாழும் வாழ்க்கையைச் சிறப்பாக வாழ்பவன், பூமியில் வாழ்ந்தாலும், வானத்துள் வாழும் தேவருள் ஒருவனாகவே மதிக்கப்படுவான்.

கலைஞர் உரை

தெய்வத்துக்கென எத்தனையோ அருங்குணங்கள் கூறப்படுகின்றன உலகில் வாழ வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன் வானில் வாழ்வதாகச் சொல்லப்படும் தெய்வத்துக்கு இணையாக வைத்து மதிக்கப்படுவான்.

Transliteration

Vaiyaththul Vaazhvaangu Vaazhpavan Vaanuryum
Theyvaththul Vaikkap Patum

Couplet

Who shares domestic life, by household virtues graced,
Shall, mid the Gods, in heaven who dwell, be placed.

Explanation in English

He who on earth has lived in the conjugal state as he should live, will be placed among the Gods who dwell in heaven.