
திருக்குறள்
திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர். இவர் கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்கும், கி.மு. ஒன்றாம் நூற்றாண்டுக்கும் இடையில் வாழ்ந்தவராகக் கருதப்படுகிறார்.
இந்த நூல் சங்க இலக்கிய நூல் தொகுப்பான பதினெண்கீழ்கணக்கு நூல்களில் ஒன்றாகும்.
இது உலக மக்கள் அனைவருக்கும், எக்காலத்திற்கும் பொருந்தும் வகையில் அமைவதால் “உலக பொதுமறை” என்று அழைக்கப்படுகிறது.
ஒவ்வொரு குறளும் இரண்டு அடிகளில் உலகத் தத்துவங்களை சொல்வதால் இதனை “ஈரடி நூல்” என்றும் அழைப்பர்.
இது அறம், பொருள், இன்பம் (காமம்) என்னும் முப்பெரும் பிரிவுகளைக் (பால்களைக்) கொண்டதால் இந்நூல் “முப்பால்” என்றும் அழைக்கப்படுகிறது.
திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்ற 3 பெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் மொத்தம் 9 இயல்களும் 133 அதிகாரங்களும் உள்ளன. ஒவ்வொரு அதிகாரத்திற்கும் 10 பாடல்கள் வீதம் மொத்தம் 1330 பாடல்கள் உள்ளன.
திருக்குறளின் வேறு பெயர்கள்
- உத்தரவேதம்
- பொய்யாமொழி
- வாயுரை வாழ்த்து
- தெய்வநூல்
- பொதுமறை
- முப்பால்
- தமிழ் மறை
- ஈரடி நூல்
- வான்மறை
- உலகப் பொதுமறை

