தமிழகத்தில் மேலும் புதிதாக 5,976 பேருக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மாநிலத்தில் மொத்த கொரோனா பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 4,51,827 ஆக உள்ளது.
லாக்டௌன் காலத்தில் 4 மாதங்களுக்கும் மேலாக ஸ்தம்பித்து, நிலுவையில் உள்ள அனைத்து பணிகளையும் முடிக்க, செப்டம்பர் 1 முதல் அரசு அலுவலகங்கள் சனிக்கிழமைகளிலும் கட்டாயமாக செயல்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.
தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகளைச் செய்யும் கைவினைஞர்கள், தேவையான அரசாங்க ஆதரவு கிடைக்காததால், சமீப காலங்களில் பிற தொழில்களை நோக்கி நகரத் தொடங்கியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய ராணுவம் இந்தியாவுக்கு சொந்தமான பகுதியில், ஆக்கிரமிக்க நினைத்த சீன ராணுவத்திற்கு, தக்க பதிலடி கொடுத்து, ராணுவ ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை இந்தியாவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
நாட்டின் இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதில் இந்தியா கொண்டிருக்கும் உறுதிப்பாட்டைப் பற்றி எந்த சந்தேகமும் வேண்டாம் என்று இந்தியா திட்டவட்டமாக சீனாவிடம் தெரிவித்துள்ளது.
கோவிட் -19 தொற்றுநோய்க்கான தடுப்பூசிக்காக உலகம் முழுவதும் காத்திருக்கிறது. ஆனால் 2021 ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்கு முன்னதாக கொரோனா தடுப்பூசி வரும் என்று எதிர் பார்க்கவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.