பால்: அறத்துப்பால்
அதிகாரம்: வான்சிறப்பு
குறள்
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின் றுடற்றும் பசி
மு.வ உரை
மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்.
சாலமன் பாப்பையா உரை
நஉரிய காலத்தே மழை பெய்யாது பொய்க்குமானால், கடல் சூழ்ந்த இப்பேருலகத்தில் வாழும் உயிர்களைப் பசி வருத்தும்.
கலைஞர் உரை
கடல்நீர் சூழ்ந்த உலகமாயினும், மழைநீர் பொய்த்து விட்டால் பசியின் கொடுமை வாட்டி வதைக்கும்.
Transliteration
Vinindru Poippin Virineer Viyanulakaththu
Ulnindru Utatrum Pasi
Couplet
If clouds, that promised rain, deceive, and in the sky remain,
Famine, sore torment, stalks o’er earth’s vast ocean-girdled plain.
Explanation in English
If the cloud, withholding rain, deceive (our hopes) hunger will long distress the sea-girt spacious world.

