“அமைதி ஏற்பட நம்பிக்கை தேவை”: சீன பாதுகாப்பு அமைச்சர் முன்னிலையில் ராஜ்நாத் சிங்

சீன எல்லைப் பகுதியான LAC-யில் சீனா செய்யும் அனைத்து சதிகளையும் முறியடிக்கும் திறன் இந்திய ஆயுதப்படைகளுக்கு உள்ளது என்று பாதுகாப்பு தலைமைத் தளபதி (CDS) ஜெனரல் பிபின் ராவத் திட்ட வட்டமாக தெரிவித்தார்.

Hyundai, Kia Motors கார்களில் தீ பற்றும் அபாயம்: இந்த நாடுகளில் கார்கள் திரும்பப்பெறப்பட்டன!!

நீங்கள் Kia Motors அல்லது Hyundai கார்களை வாங்க நினைத்திருந்தால், இந்த செய்தியை நீங்கள் முதலில் படிக்க வேண்டும். இந்த இரண்டு நிறுவனங்களின் வாகனங்களின் சில மாடல்களில் தீ விபத்து ஏற்பட்டதாக புகார்கள் வந்துள்ளன.

சீனாவிற்கு ஆப்பு வைத்த தாய்லாந்து.. அதிர்ச்சியில் உறைந்த சீன அதிபர் Xi Jinping..!!

KRA கால்வாய் திட்டம், சீனாவிற்கு, ராணுவ நீதியாகவும் மூலோபாய ரீதியில், ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும்.

அமெரிக்காவுக்கு போயும் போலி ஓட்டா? வழக்கில் சிக்கிய இந்தியர்!!

கடந்த காலங்களில் இந்தியாவில் போலி வாக்களிப்பு பற்றிய செய்திகள் சாதாரணமாகி விட்டன. ஒவ்வொரு தேர்தலிலும் போலி வாக்குகள் பற்றிய குற்றச்சாட்டுகளும் சலசலப்புகளும் ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.

இந்தியாவுக்குப் பிறகு, மலேசியாவும் இந்த நாடுகளை ‘No entry’ பட்டியலில் சேர்த்தது….

கொரோனா வைரஸின் (CoronaVirus) புதிய தொற்றுகள் வெளிவந்த பின்னர் மலேசியா (Malaysia) அமெரிக்கா, யுனைடெட் கிங்டம் மற்றும் பிரான்ஸ் (US, UK,France) ஐ ‘No entry’ பட்டியலில் சேர்த்துள்ளது.

அமைச்சர் மீது பாலியல் குற்றச்சாட்டு!! 15 நாட்களில் பாகிஸ்தானை விட்டு வெளியேறுங்கள்

சர்ச்சைக்குரிய அமெரிக்க பதிவர் சிந்தியா ரிச்சியை 15 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு பாகிஸ்தான் (Pakistan) கேட்டுக் கொண்டுள்ளது.

குறள்-70

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: மக்கட்பேறு


குறள்

மகன் தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்லெனும் சொல்

மு.வ உரை

மகன் தன் தந்தைக்குச் செய்யத் தக்க கைம்மாறு, இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்.

சாலமன் பாப்பையா உரை

தன்னைக் கல்வி அறிவு உடையவனாய் ஆளாக்கிய தந்தைக்கு மகன் செய்யும் கைம்மாறு, பிள்ளையின் ஒழுக்கத்தையும் அறிவையும் கண்டவர், இப்பிள்ளையைப் பெறுவதற்கு இவன் தகப்பன் என்ன தவம் செய்தானோ என்று சொல்லும் சொல்லைப் பெற்றுத் தருவதே.

கலைஞர் உரை

“ஆகா! இவனைப் பிள்ளையாகப் பெற்றது இவன் தந்தை பெற்ற பெறும்பேறு”, என்று ஒரு மகன் புகழப்படுவதுதான், அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யக்கூடிய கைம்மாறு எனப்படும்.

Transliteration

Makandhandhaikku Aatrum Udhavi Ivandhandhai
Ennotraan Kol Enum Sol

Couplet

To sire, what best requital can by grateful child be done?
To make men say, ‘What merit gained the father such a son?’

Explanation in English

(So to act) that it may be said “by what great penance did his father beget him,” is the benefit which a son should render to his father.

குறள்-69

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: மக்கட்பேறு


குறள்

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்

மு.வ உரை

தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் என பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனை பெற்றக் காலத்தில் உற்ற மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள்.

சாலமன் பாப்பையா உரை

தம் மகனைக் கல்வி ஒழுக்கங்களால் நிறைந்தவன் என்று அறிவுடையோர் கூற அதைக் கேட்ட தாய், அவனைப் பெற்ற பொழுதைக் காட்டிலும் மிகுதியாக மகிழ்வாள்.

கலைஞர் உரை

நல்ல மகனைப் பெற்றெடுத்தவள் என்று ஊரார் பாராட்டும் பொழுது அவனைப் பெற்றபொழுது அடைந்த மகிழ்ச்சியைவிட அதிக மகிழ்ச்சியை அந்தத் தாய் அடைவாள்.

Transliteration

Eendra Pozhudhin Peridhuvakkum Thanmakanaich
Chaandron Enakketta Thaai

Couplet

When mother hears him named ‘fulfill’d of wisdom’s lore,’
Far greater joy she feels, than when her son she bore.

Explanation in English

The mother who hears her son called “a wise man” will rejoice more than she did at his birth.

குறள்-68

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: மக்கட்பேறு


குறள்

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது

மு.வ உரை

தம் மக்களின் அறிவுடைமை தமக்கு இன்பம் பயப்பதை விட உலகத்து உயிர்களுக்கேல்லாம் மிகுந்த இன்பம் பயப்பதாகும்.

சாலமன் பாப்பையா உரை

தம் பிள்ளைகள் அறிவு மிக்கவராக இருப்பது, தம்மைக் காட்டிலும், இப்பெரிய பூமியில் அழியாமல் தொடரும் உயிர்களுக்கு எல்லாம் இனிது.

கலைஞர் உரை

பெற்றோரைக் காட்டிலும் பிள்ளைகள் அறிவிற் சிறந்து விளங்கினால், அது பெற்றோருக்கு மட்டுமேயன்றி உலகில் வாழும் அனைவருக்கும் அக மகிழ்ச்சி தருவதாகும்.

Transliteration

Thammindham Makkal Arivutaimai Maanilaththu
Mannuyirk Kellaam Inidhu

Couplet

Their children’s wisdom greater than their own confessed,
Through the wide world is sweet to every human breast.

Explanation in English

That their children should possess knowledge is more pleasing to all men of this great earth than to themselves.